வேட்டுவ மன்னன் வல்வில் ஓரியின் புதகம் ஆடி 18 அன்று வெளிடப்பட்டது வாங்கி படிக்கவும்

  • Posted on Mon Aug 22, 2022
  • 3070 Views

வேட்டுவ மன்னன்  வல்வில் ஓரியின் புதகம் ஆடி 18 அன்று வெளிடப்பட்டது வாங்கி படிக்கவும் 

தமிழன் என்றால் உலகம் எல்லாம் வியந்து பார்க்கும்  அளவிற்கு பெருமையும் , திறமையும் மிக்கவர்கள் ஆவார்கள் 
  தமிழனின் பெருமை நிகழ்காலத்தில் மட்டுமில்லாமல் சங்க காலம் முதலே இந்த உலகம் வியந்து பாராட்டிக் கொண்டிருந்தது .
 தமிழனுடைய வீரம் கொடை  தீரம் போன்ற சிறப்பு மிக்க பண்புகளால் இவர்கள் உலகத்தையே ஆளும் வல்லமை பெற்று விளங்கினார்கள் இத்தகைய பெருமைமிக்க தமிழர்களின் குறிஞ்சி நிலத்தை ஆண்டு வந்த நமது கடையேழு வள்ளல்கள் மனித இனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மிகப்பெரும் வள்ளல்களாகவும் வீரர்களாகவும் வாழ்ந்து நமக்கு ஒரு உதாரணமாய் அமைந்தார்கள் இத்தகைய பெருமைமிக்க கடை ஏழு வள்ளல்கள் ஏழு வரும் வேட்டுவ மன்னர்களே என்பது நமக்கு எல்லாம் சிறப்பு
 கடையெழு வள்ளல்கள் ஏழு வரும் குறிஞ்சி நிலத்தையே தனது ஆட்சி நிலமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள் குறிஞ்சி நிலத்தின் தலைவன் வேட்டுவர்களே இதை தொல்காப்பியர் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார் ஏழுவரில் மிகச் சிறந்தவராக கொல்லிமலையை ஆட்சி செய்த வல்வில் ஓரி விளங்குகிறார் அவரைப் பற்றி ஒரு கருத்தரங்கம் அமைத்து அதன் வழியாக வல்வில் ஓரியின் வரலாற்றை நமது தமிழக மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமையாகும் இதை சிறப்பாக செய்த கண்ணப்பர் கல்வி அறக்கட்டளை, வேட்டுவர் வணிக மேம்பாட்டு அமைப்பிற்கும் வேட்டுவர் டிவிக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு சந்திரசேகர் வரலாற்று ஆசிரியர் புலவர் பூலுவர ராஜன் வாழவந்தியார் என்று அன்போடு அழைக்கும் வாழவந்தி திரு சரவணன் வரலாற்று ஆசிரியர் ஆனந்தகுமார் வரலாற்று ஆசிரியர் கோவிந்தராஜ் திரு குலோத்துங்கராயன் திரு ரமேஷ் திரு நிஷாந்த் இன்ஜினியர் திரு கோபிநாத் வரலாற்று ஆசிரியர் கோபிநாத் கண்ணப்பர் கல்வி மடல் ஆசிரியர் திரு கைலாசம், திரு சிவானந்தம், மற்றும் திரு மல்லீஸ்வரன்  ஆகியோர்களுக்கு  நன்றி  இந்த நிகழ்ச்சியை பார்த்து மற்றவர்களுக்கு பகிர்ந்து நம் வேட்டுவர் பெருமையை உலகுக்கு எடுத்துக் கூறூவோம்
நன்றி
Vettuvar TV